தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதிகளில் வருகை பதிவேடு கருவி முடக்கம்; மாணவர்கள் உணவு தொகையில் தில்லுமுல்லு

விடுதிகளில் வருகை பதிவேடு கருவி முடக்கம்; மாணவர்கள் உணவு தொகையில் தில்லுமுல்லு

விடுதிகளில் வருகை பதிவேடு கருவி முடக்கம்; மாணவர்கள் உணவு தொகையில் தில்லுமுல்லு


UPDATED : நவ 01, 2026 06:54 PM

ADDED : நவ 01, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 06:54 PM ADDED : நவ 01, 2026 06:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சமூக நீதி விடுதிகளில் பொருத்தப்பட்ட, 'பயோ மெட்ரிக்' எனப்படும், விரல்ரேகை வருகைப் பதிவேடு கருவியை முடக்கி, மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக காண்பித்து, உணவுத்தொகை பெற்று முறைகேடு நடந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சமூக நீதித் துறையின் கீழ், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக, 1,350க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன.

சில நாட்களுக்கு முன், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுத்தொகை, மாதம் தலா, 1,400 ரூபாய் என்பது 1,800 ரூபாயாகவும், கல்லுாரி மாணவருக்கு 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், அரசு உயர்த்தி, அரசானை வெளியிட்டது.

விடுதி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவுத்தொகை ஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கையில், முறைகேடு நடப்பதை தடுக்க, மாணவர்களின் உண்மையான வருகைப் பதிவை உறுதி செய்ய, விடுதிகளில் கடந்த 2025ம் ஆண்டு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயமாகப்பட்டது. நாளடைவில், உயர் அதிகாரிகள் பயோ மெட்ரிக் வருகையை கண்டு கொள்ளவில்லை.

இதை பல இடங்களில், விடுதி காப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில், பல சமூக நீதி மாணவர்கள் விடுதிகளில், பயோ மெட்ரிக் கருவி முடக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எண்ணிக்கையை கூடுதலாக காண்பித்து, உணவுத் தொகையை கூடுதலாக பெறுவதற்காக, சில விடுதி காப்பாளர்கள், பயோ மெட்ரிக் கருவியை முடக்கி வைத்திருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us