நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்கள் கவனத்திற்கு; தேர்வு வாரியம் முக்கிய எச்சரிக்கை
நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்கள் கவனத்திற்கு; தேர்வு வாரியம் முக்கிய எச்சரிக்கை
UPDATED : ஆக 04, 2025 12:00 AM
ADDED : ஆக 04, 2025 03:28 PM

புதுடில்லி:
நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட விவரங்களை பகிரவோ, வெளியிடவோ கூடாது என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் எச்சரித்துள்ளது.
2025-26ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் அதிகமான எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
தேர்வும் ஒரே கட்டமாக நடந்துள்ள நிலையில், அதில் பங்கேற்றவர்களுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வை எழுதியவர்கள், எக்காரணத்தைக் கொண்டு தேர்வு உள்ளடக்கத்தை பகுதி அளவிலோ, முழுமையாகவோ பகிரவோ, வெளியிடவோ கூடாது.
வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும், டிஜிட்டல் வழியிலும் வெளியிடக் கூடாது என்றும் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.