தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு


UPDATED : மே 21, 2025 12:00 AM

ADDED : மே 21, 2025 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2025 12:00 AM ADDED : மே 21, 2025 04:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. மொத்தம் 615 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)

உதவிப் பொறியாளர் (அமைப்பியல் / மின்னியல் / வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (21-05-2025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 27.05.2025 முதல் 25.06.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித்தேர்வு 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us