UPDATED : செப் 27, 2024 12:00 AM
ADDED : செப் 27, 2024 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது துவங்க, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை காலங்களில், மின் இணைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெனரேட்டர்கள் இருப்பின் அவற்றை உயரமான இடங்களில் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழைய கட்டடங்கள் இருப்பின், அவற்றை கண்காணிப்பது அவசியம். இடியும் நிலையில் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அப்புறப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகள் கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன, என்றார்.