தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீர் ஆதாரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை அனைவரும் தவிர்க்க அறிவுரை

நீர் ஆதாரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை அனைவரும் தவிர்க்க அறிவுரை

நீர் ஆதாரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவதை அனைவரும் தவிர்க்க அறிவுரை


UPDATED : பிப் 25, 2026 10:58 AM

ADDED : பிப் 25, 2026 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2026 10:58 AM ADDED : பிப் 25, 2026 11:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி:
'நீர் ஆதாரங்களில் பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்த்தால், சுற்றுச்சூழல் மேம்படும்,' என, அறிவுறுத்தப்பட்டது.

ஊட்டி காந்தள் ஓம் பிரகாஷ் ஆரம்பப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், திடக்கழிவு மேலாண்மை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

பிளாஸ்டிக், மருத்துவம், மின்னணு, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உபயோகப்படுத்திய பிளேடு கழிவுகள் சரியான முறையில் அப்புறப்படுத்துவதன் வாயிலாக, விலங்குகள் உட்பட, பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, நீர் ஆதாரங்கள் மற்றும் பொது இடங்களில், பழைய துணிகள், பிளாஸ்டிக் குப்பைகளை வீசி எரிந்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இதன் மூலம், சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு, தண்ணீர் மேலாண்மை மேம்படும்,” என்றார்.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில், 'வீட்டு தோட்டங்களில் மூலிகை செடிகள் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்,' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வீடுகளில் மூலிகை தோட்டம் அமைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், துணிப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆசிரியைகள் கற்பகவல்லி, மகாலட்சுமி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us