UPDATED : ஏப் 04, 2026 04:06 PM
ADDED : ஏப் 04, 2026 04:09 PM
அ நிறம் | அளவு
வானூர்:
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடந்த அறிவுசார் போட்டியில் வெற்றி பெற்ற வானூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி மற்றும் மயிலம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான அறிவுசார் மற்றும் கலைப்போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதே போன்று வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் வில்லியம் பாராட்டி வாழ்த்தினார். வணிகவியல் துறைத்தலைவர் தேவநாதன், துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
