தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது

வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது

வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது


UPDATED : செப் 25, 2024 12:00 AM

ADDED : செப் 25, 2024 08:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2024 12:00 AM ADDED : செப் 25, 2024 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

கவுன்சிலின் தலைவரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில், வேளாண் பல்கலையின் நான்கு விஞ்ஞானிகள் விருது பெற்றனர்.

பயிர் மேலாண்மையில் வினையியல் அணுகுமுறை துறையில் பங்களிப்புச் செய்தமைக்காக, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் ஜெயகுமார், 2018ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.

உயிர் வினையூக்கி, செல் புரதங்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக, வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார், 2019ம் ஆண்டுக்கான விருது பெற்றார். வைரஸ் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு ஆய்வு தொடர்பாக, தாவர நோயியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் 2020ம் ஆண்டுக்கான விருது பெற்றார்.

இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள் (டாபி) திட்டம் சார்ந்த பங்களிப்புக்காக, வனவியல் துறை பேராசிரியர் பார்த்திபன், 2021ம் ஆண்டுக்கான விருது பெற்றார். விருதுபெற்ற விஞ்ஞானிகளை, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வாழ்த்தினார். பதிவாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us