UPDATED : ஆக 04, 2025 12:00 AM
ADDED : ஆக 04, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசு வழங்கப்படுகிறது.
கோவை கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், கலை மற்றும் இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, 'திருமதி ரங்கம்மாள்' என்ற பெயரில் பரிசு வழங்கப்படுகிறது.
2023- 24ம் ஆண்டில் வெளியான 25 நாவல்கள் பரிசுப் போட்டிக்கு வந்திருந்தன. கோவையை சேர்ந்த எழுத்தாளர் அகிலா எழுதிய, அறவி என்ற நாவல் இந்த ஆண்டுக்கான திருமதி ரங்கம்மாள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.எழுத்தாளர் அகிலாவுக்கு பரிசுத்தொகையாக, 40 ஆயிரம் ரூபாயும், நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

