UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 08:33 AM
கண்டாச்சிபுரம்:
கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஆசிரம நிர்வாகி தேவகி தலைமை தாங்கினார். அரசு கல்லுாரி முதல்வர் கணேசன், ஓய்வு பெற்ற சி.இ.ஓ., ராஜசேகர், செங்கமேடு குருபிரகாஷ் சுவாமிகள் முன்னிலை வகித்தனர். மேலாளர் செல்லம்மாள் வரவேற்றார். நிழ்ச்சியில் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக அலுவலர் ரவி, நட்ராஜ் ஐ.டி.ஐ., தாளாளர் மேகநாதன், ரமேஷ், பாரதி, செந்தில்நாதன், சத்தியராஜ் வாழ்த்திப் பேசினர். விழாவில் ஐ.டி.ஐ., முதல்வர் நுார்முகம்மது, துணை முதல்வர் குமரேசன், பயிற்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பழனிவேலு கல்வி நிறுவன நிறுவன அறங்காவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.