தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு


UPDATED : ஜன 27, 2026 10:32 AM

ADDED : ஜன 27, 2026 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 10:32 AM ADDED : ஜன 27, 2026 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி பிராந்திய அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் அட்டவணை இன மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அம்பேத்கர் நினைவு பரிசாக தலா ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 593 மதிப்பெண் எடுத்த திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவர் தயாநிதி, 579 மதிப்பெண் பெற்ற பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவி பசுமதி, 340 மதிப்பெண் எடுத்த கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா, 299 மதிப்பெண் எடுத்த முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சய் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசை கவர்னர் வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us