UPDATED : ஜூலை 23, 2026 03:48 PM
ADDED : ஜூலை 23, 2026 03:49 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதிரடிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமை தாங்கி, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், போதைப் பொருட்கள், சாலை பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
