UPDATED : அக் 30, 2026 06:18 PM
ADDED : அக் 30, 2026 06:19 PM
திருத்தணி:
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி மலர்கொடி பங்கேற்றார்.
திருத்தணி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடந்தது.
இதில், திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி மலர்கொடி பேசியதாவது:
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, 'போக்சோ' சட்டம் நடைமுறையில் உள்ளது. மாணவியர் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான அணுகுமுறைகள் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.
மாணவியர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், தொலைபேசி எண்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் போலியான கணக்குகள் மூலம் நடைபெறும் மோசடிகள், இணையவழித் தொல்லைகள் மற்றும் தவறான தகவல்களால் ஏற்படும் பிரச்னைகள் இருந்தால், பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
