ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
UPDATED : ஆக 12, 2026 04:31 PM
ADDED : ஆக 12, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கலைக் கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். அறிவியல் புல முதல்வர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் ராஜா வரவேற்றார்.
ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன், சின்னசேலம் தலைமைக் காவலர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர் சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, போதை இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும். போதை மனதை கெடுக்கும். இளைஞர்கள் தீய வழியில் செல்லக் கூடாது என அறிவுறுத்தினார்.
அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழியேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் அசோக் நன்றி கூறினார்.
