UPDATED : நவ 21, 2026 04:32 AM
ADDED : நவ 21, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்:
திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் நகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். நகரமைப்பு அலுவலர் திலகவதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷ்னர் பானுமதி, 'இயற்கையாக பெய்யும் மழை நீரை வீணாக்காமல் சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்' என்று பேசினார். இதில் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
