sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிரமிப்பூட்டுகிறது கடல்வாழ் உயிரின புகைப்பட கண்காட்சி

/

பிரமிப்பூட்டுகிறது கடல்வாழ் உயிரின புகைப்பட கண்காட்சி

பிரமிப்பூட்டுகிறது கடல்வாழ் உயிரின புகைப்பட கண்காட்சி

பிரமிப்பூட்டுகிறது கடல்வாழ் உயிரின புகைப்பட கண்காட்சி


UPDATED : ஜன 24, 2026 04:46 PM

ADDED : ஜன 24, 2026 04:48 PM

Google News

UPDATED : ஜன 24, 2026 04:46 PM ADDED : ஜன 24, 2026 04:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்:
நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரியில், கடலுயிர் ஆய்வாளர் மற்றும் விஞ்ஞானி லால்மோகன் நினைவாக, 'ஆழியில் ஒரு தடம்' எனும் கடல்வாழ் உயிரின புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது.

ஏ.ஜே.கே., கல்வி குழும தலைவர் அஜித்குமார் லால் மோகன் முன்னிலையில், எம்.பி., ஈஸ்வரசாமி கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் விஞ்ஞானி லால்மோகன் டால்பின், திமிங்கலம், கடல் பசு குறித்து எடுத்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக, அழியும் தருவாயிலுள்ள கடல் பசுவின் வாழ்க்கை குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஜி.ஆர்.ஜி., கல்வி நிறுவனங்களின் தலைவர் நந்தினி, கண்காட்சி குறித்த கையேடு வெளியிட்டார்.

கல்லூரி முதல்வர் ராஜு, தமிழ் துறை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பிரியா கூறுகையில், 'கடல்வாழ் உயிரினங்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் அறிய இக்கண்காட்சி உதவும். வரும் 27 வரை தினமும் காலை, 11:00 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us