தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பங்காரம் லஷ்மி கலை அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா

பங்காரம் லஷ்மி கலை அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா

பங்காரம் லஷ்மி கலை அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா


UPDATED : ஏப் 20, 2026 07:22 PM

ADDED : ஏப் 20, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 07:22 PM ADDED : ஏப் 20, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் 13வது பட்டமளிப்பு விழா என மூன்று நாட்கள் நடந்தது. விழாவிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

பட்டமளிப்பு விழாவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக நடந்த விளையாட்டு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

அதே போல் கல்லுாரி ஆண்டு விழாவில் நகைச்சுவை நாவலர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா, இயற்பியல் துறை தலைவர் மணிகண்டன், உடற்கல்வி இயக்குனர் பாலாஜி உட்பட கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us