தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கல்


UPDATED : செப் 17, 2026 02:12 PM

ADDED : செப் 17, 2026 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 02:12 PM ADDED : செப் 17, 2026 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கூனிச்சம்பட்டு, பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் அர்ப்பணிக்கும் மற்றும் மாணவர்களுக்கான வங்கிக் கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக்கு மானியமாக வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்தை கொண்டு, இரண்டு வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டது. பயனாளிகள் நேரடி பயன்பாட்டு திட்டத்தின் கீழ், புதுச்சேரி கிராம வங்கி கூனிச்சம்பட்டு கிளை சார்பில், மாணவர்கள் 110 பேருக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டது.

அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவிற்கு, வட்டம் 5, பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன், கூனிச்சம்பட்டு கிளை மேலாளர் கவுசிக் ஆகியோர் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட 2 வகுப்பறைகள் திறந்து வைத்து, மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினர்.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us