அமெரிக்கா டெக்சாஸில் பன்சுவின் முதல் நேரடி கணிதக் கற்றல் மையம் திறப்பு
அமெரிக்கா டெக்சாஸில் பன்சுவின் முதல் நேரடி கணிதக் கற்றல் மையம் திறப்பு
UPDATED : நவ 28, 2025 05:23 PM
ADDED : நவ 28, 2025 05:28 PM

சென்னை:
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கணிதக் கற்றல் தளம் 'பன்சு', அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மெக்கின்னியில் தனது முதல் நேரடி கற்றல் மையத்தை துவக்கியுள்ளது.
உலகின் வேகமான மனித கால்குலேட்டர் என பாராட்டப்படும் இந்திய கணிதவியலாளர் நீலகண்ட பானுவால் உருவாக்கப்பட்ட பன்சு, மாணவர்கள் கணிதத்தை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் கற்கும் வகையில் ஆன்லைனில் வழங்கி வந்த நிலையில், இப்போது நேரடி வகுப்புகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த முயற்சி, கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்விக்கு அதிக வரவேற்பு காணப்படும் டெக்சாஸ் மாநிலத்தில் பெற்றோர்களும் பள்ளிகளும் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல் மையம் திறக்கப்பட்டிருப்பது, பன்சுவின் உலகளாவிய முயற்சிக்கு முக்கியமான படியாகும் என அதன் நிறுவனர் நீலகண்ட பானு தெரிவித்தார். வேகமான கணித நுட்பங்கள், கதைசொல்லல், கேமிபிகேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் குழப்பபில்லாமல் பயன்படுத்தும் பன்சு, இந்தியா உள்பட 16 நாடுகளில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஈர்த்துள்ளது.

