பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் டிரோன் அடிப்படை பயிற்சி
பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் டிரோன் அடிப்படை பயிற்சி
UPDATED : செப் 12, 2026 01:35 PM
ADDED : செப் 12, 2026 01:36 PM
ஈரோடு:
கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியின் தொழில் நிறுவனம் கூட்டாண்மை மையம் சார்பில், சென்னை வாயு சாஸ்திரா ஏரோஸ்பேஸ் அகாடமியுடன் இணைந்து, டிரோன் அடிப்படை, அசெம்பிளி மற்றும் பறத்தல் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
வாயு சாஸ்திரா ஏரோஸ் பேஸ் அகாடமி நிறுவனர் ஜெகதீஸ் கண்ணா, சி.ஏ.ஓ., மஞ்சு, சி.டி.ஓ., நரேஷ்குமார், சி.ஓ.ஓ., வேணுகோபால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் அடிப்படை அமைப்பு, காற்றியக்கவியல், டிரோன் வடிவமைப்பு, பாகங்கள் தேர்வு, அசெம்பிள் செய்தல் மற்றும் பறத்தல் தொடர்பான கோட்பாடு மற்றும் செய்முறை பயிற்சி அளித்தனர். இதில் கல்லுாரி மாணவியர், 76 பேர் கலந்து கொண்டனர்.
