sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

/

பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM

ADDED : ஜூன் 02, 2025 10:22 AM

Google News

UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM ADDED : ஜூன் 02, 2025 10:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சுந்தமான குடிநீர், போதிய கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதையும் திமுக அரசு ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:


பள்ளிகளில் ஐந்து நாட்களுக்கு புத்தகப்பை வேண்டாம், மாணவர்களின் தனித்திறன்களை கண்டறியுங்கள்!

தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளர்கள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். அலாரம், சிருடை புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உணவு வீட்டுப்பாடம், டியூஷன், பி. டி வாத்தியாரின் விசில் சத்தம் போன்ற எந்த விதிமுறைகளும் இன்றி விடுமுறை நாட்களில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்த மழலைச் செல்வங்கள் மீண்டும் பொறுப்புடன் பள்ளி செல்வதைக் காண அனைத்து பெற்றோர்களைப் போலவே நானும் மிக ஆவலாகத் நான் இருக்கிறேன்.

ஆனால் பள்ளிகள் திறந்தவுடன் வெறும் பாடப் புத்தகங்களில் மட்டுமே பிள்ளைகளை மூழ்கழக்காமல் ஐந்து நாட்களுக்கு மாணவர்களின் புத்தகப்பைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாணவனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வகும் வேளையில், தற்போது பள்ளிப்படிப்பை விட பிள்ளைகளுக்கு பாலியல் ரீதியான புரிதலை ஏற்படுத்துவது தான் சாலச் சிறந்தது. தகுந்த ஆசிரியர்கள் மூலம் குட் டச், பேட் டச் குறித்து பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் தவறாக நன்னை நெருங்குபவர்கள் யாராயினும் மாணவர்கள் தைரியமாகப் புகாரளிக்கத் தேவையான வழிமுறைகளைத் தூரிதப்படுத்த வேண்டும்.

மேலும் விடுமுறைக் கொண்டாட்டம் முடிந்து பள்ளி திரும்பும் பிள்ளைகளுக்கு, கடிவாளமிட்ட குதிரை போல வெறும் பாடங்களை மட்டுமே கற்பித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பல நாட்கள் கழித்து தனது சக நண்பர்களை சந்திக்கையில் பாடச் சந்தேகங்களை மட்டுமா கேட்டுக் கொண்டிருக்க முடியும்? புதிய மாணவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ளவும். பழைய தோழர்களுடன் அவைளாவுவதற்கும் சிறிது கால அவகாசம் தேவையல்லவா?

எனவே விடுமுறை முடிந்து வகும் ஆசிரியர்களும் மாணவர்களும் நல்லபுரிதலுடன் தங்கள் கற்றல் பயணத்தையும் கற்பித்தல் சேவையையும் தொடரவும், மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கவும். இந்த புத்தகமில்லா ஐந்து நாட்கள் பேருதவியாக இருக்கும்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஊற்று தோண்டி நீர் பருகிய கொடுமையை இந்த தமிழகம் இன்னும் மறக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சுந்தமான குடிநீர், போதிய கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதையும் திமுக அரசு ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us