வீடியோ எடுக்கும்போது கவனமா இருக்கணும்; குரூப் 2 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., எச்சரிக்கை
வீடியோ எடுக்கும்போது கவனமா இருக்கணும்; குரூப் 2 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., எச்சரிக்கை
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:56 PM

சென்னை:
குரூப் 2 தேர்வு எழுதும் பட்டதாரிகள், தேர்வு எழுதும் போது வீடியோ எடுக்க வருபவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2, 2ஏ, நிலையில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. பட்டப்படிப்பு கல்வித்தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான முதல்நிலை தேர்வு, செப்டம்பர் 14ல் நடக்கிறது. ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
* வீடியோகிராபர், டேபிள், ஹால் டிக்கெட்டில் எழுதப்பட்ட பதிவு எண்ணுடன் தேர்வு எழுதுபவரை வீடியோ எடுப்பார்.
* வீடியோகிராபருடன் ஒத்துழைத்து முகம் மற்றும் பதிவு எண்ணின் தெளிவான காட்சிகளை படம் எடுப்பதற்காக மேசைக்கு வரும் போது காண்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* ஆள் மாறாட்டம் உட்பட எந்தவொரு முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தரமாக தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்.