UPDATED : ஜன 04, 2025 12:00 AM
ADDED : ஜன 04, 2025 08:52 AM
சென்னை:
மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம் என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த தடை விதித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் தி.மு.க.,வின் கொடுங்கோல் போக்கு கண்டனத்திற்குரியது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, அறவழியில் போராடுவதற்கே அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை கொடுப்போரைக்கூட கைது செய்து ஒடுக்குவதுமான இச்செயல்பாடுகள் யாவும் பாசிசப் போக்காகும்.
கடந்த காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டங்களை எல்லாம் தன்வயப்படுத்தினர். அவற்றை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து, ஓட்டு அரசியலில் தி.மு.க., லாபம் பெற்றது. ஆளுங்கட்சியானதும், எதிர்க்கட்சிகளை முழுதும் போராட விடாமல் முடக்குவதும், அரசே வன்முறைகளை ஏவி விடுவதும் ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.