உயிரியல் கடினம், தாவரவியல் எளிது பிளஸ் 1 மாணவர்கள் தகவல்
உயிரியல் கடினம், தாவரவியல் எளிது பிளஸ் 1 மாணவர்கள் தகவல்
UPDATED : மார் 18, 2025 12:00 AM
ADDED : மார் 18, 2025 09:44 AM
அன்னுார் :
பிளஸ் 1 தேர்வில், உயிரியல் கடினமாகவும், தாவரவியல் எளிதாகவும் இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 தேர்வில், நேற்று அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, தாவரவியல் தேர்வும், முதல் குரூப் மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் நடந்தது.
உயிரியல் தேர்வு கடினம்
ஸ்ரீயா, அய்யப்ப ரெட்டிபுதுார்:
உயிரியல் தேர்வில், தாவரவியலில் 35 மதிப்பெண்களுக்கும், விலங்கியலில் 35 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்களில் பாதி அளவு கேள்விகள் கடினமாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியாது.
சுகப்பிரியா, அன்னுார்:
ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிது. எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆனால் அதிக மதிப்பெண் பெற முடியாது.
அதிக மதிப்பெண் பெறலாம்
சந்தோஷ், பச்சாகவுண்டனுார்:
தாவரவியல் தேர்வில் மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மதிப்பெண்ணுக்கு 15 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண்களில் 5 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.