தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் பிளண்டட் பயோசயின்ஸ்

பாரதியார் பல்கலையில் பிளண்டட் பயோசயின்ஸ்

பாரதியார் பல்கலையில் பிளண்டட் பயோசயின்ஸ்


UPDATED : மே 14, 2026 06:16 PM

ADDED : மே 14, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 06:16 PM ADDED : மே 14, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை பாரதியார் பல்கலை, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையுடன் இணைந்து, நடப்பு கல்வியாண்டு முதல், 'பி.எஸ்சி., பிளண்டட் பயோசயின்ஸ்' எனும் புதிய இளங்கலை படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய பல்கலை, உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இப்படிப்பை, தமிழகத்தில் முதன்முறையாக, ஒரு மாநில பல்கலை அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் இரு ஆண்டுகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய நான்கு முக்கிய அறிவியல் துறைகள், ஒருங்கிணைந்த பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

மூன்றாம் ஆண்டில், இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையை மாணவர்கள் தங்கள் முதன்மை பாடமாக தேர்வு செய்து, சிறப்பு பயிற்சி பெறலாம்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடைபெறும். பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us