உறைவிட பள்ளி மாணவர்கள் ஹூப்பள்ளியில் கண்டுபிடிப்பு
உறைவிட பள்ளி மாணவர்கள் ஹூப்பள்ளியில் கண்டுபிடிப்பு
UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 12:39 PM
கொப்பால்:
கொப்பாலின் உறைவிட பள்ளியில் இருந்து, சுவரை தாண்டி குதித்து தப்பிய நான்கு மாணவர்கள், ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கொப்பாலின், தாவரகேரா அருகில் மேனதாள கிராமத்தில் மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் நான்கு மாணவர்கள், நேற்று முன் தினம் இரவு பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்துத் தப்பி ஓடிவிட்டனர்.
நேற்று காலையில், மாணவர்கள் மாயமானது குறித்து உறைவிட பள்ளி ஊழியர்களுக்கு தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தாவரகேரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும், மாணவர்களை தேட துவங்கினர். நேற்று மாலையில், ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் மாணவர்களிடம் விசாரித்தபோது, 'எங்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. மும்பைக்கு சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தோம். ரயிலில் மும்பைக்கு செல்ல, ஹூப்பள்ளி ரயில் நிலையத்துக்கு வந்தோம் என்றனர்.
இவர்களுக்கு போலீசார் புத்திமதி கூறி, உறைவிட பள்ளியில் ஒப்படைத்தனர்.