கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு போயர் பேரவை வலியுறுத்தல்
கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு போயர் பேரவை வலியுறுத்தல்
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 08:50 AM
ஓமலுார்:
தமிழ்நாடு போயர் பேரவை, திராவிட மக்கள் புரட்சி கழகம் இணைந்து, ஓமலுாரில் உரிமை மீட்பு மாநாட்டை நேற்று நடத்-தின. மாநில தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.
அதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்பட, 13 மாவட்டங்களில் வசித்து வரும், இச்சமுதாய மக்களுக்கு அர-சியல் குறித்த அறிவை வழங்கி ஒருங்கிணைக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், என்றார்.
தொடர்ந்து சமுதாய மக்களின் அனைத்து பிரிவுகளுக்கும் சீர்மரபினர் எனும் ஒரே ஜாதி சான்றிதழ் வழங்குதல்; போயர் நல வாரியம் அமைத்தல்; ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தல்; கல்வி, வேலைவாய்ப்பில், 2 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குதல் உள்பட, 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலர் பெரியபொண்ணு, துணை செயலர்கள் நரசப்பன், பொன்னையன், அர்ஜூணன், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.