UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:27 AM
திருவேற்காடு:
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில், ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
புதிய நீதிக் கட்சி நிறுவனரான ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லுாரி இது. தற்போது, இவர் வேலுார் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், கல்லுாரி நிர்வாகத்திற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், 24 நேரத்திற்குள் 1 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், கல்லுாரியில் வெடிகுண்டு வெடிக்கும் என, மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கல்லுாரி நிர்வாகத்தினர், திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், வேலுார் மாவட்டத்தில் இருந்து, லட்சுமணன் என்பவர் தபால் வாயிலாக மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவ கல்லுாரி முழுதும் சோதனை நடத்தினர். மிரட்டல் கடிதம் வெறும் புரளி என தெரிய வந்தது.