UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM
ADDED : ஜூலை 03, 2024 09:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:
மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று மதியம் 12:00 மணிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, இ -மெயில் வந்தது. இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்தினர், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மறைமலை நகர் போலீசார் அளித்த தகவலின்படி, தாம்பரம் மாநகர காவல் வெடிகுண்டு நிபுணர்கள் பல்கலைக்கழக வளாகம், நூலகம், ஆடிட்டோரியம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதில், வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்தது. மேலும், இ- மெயில் அனுப்பியது யார் என, மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.