UPDATED : மே 17, 2025 12:00 AM
ADDED : மே 17, 2025 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை அண்ணா பல்கலை அலுவலக இ - மெயிலுக்கு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் பல்கலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு நிபுணர்களால் பல்கலை முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்தவிதமான வெடிப் பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. 17வது முறையாக இதுபோன்ற மிரட்டல் வந்துஉள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.