வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மதுரையில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை; மர்மநபருக்கு வலைவீச்சு
UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 09:08 AM
மதுரை:
மதுரையில் 3 பிரபல பள்ளிகளுக்கு செப்.,30 மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது. 3 பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும், அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும் என 3 பள்ளிகளுக்கு செப்.,30 மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, 3 பள்ளி நிர்வாகமும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தது. பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளிகளில் சோதனை நடத்தினர்.
ஆனால் எந்த மர்மபொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல், வெறும் புரளி என உறுதியானது. இருந்தாலும் இன்று 3 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட யாரும் வரவேண்டாம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.