sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3வது நாளாக 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அரசு மவுனம் காப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

/

3வது நாளாக 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அரசு மவுனம் காப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

3வது நாளாக 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அரசு மவுனம் காப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

3வது நாளாக 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அரசு மவுனம் காப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 17, 2025 12:00 AM

ADDED : ஜூலை 17, 2025 09:16 AM

Google News

UPDATED : ஜூலை 17, 2025 12:00 AM ADDED : ஜூலை 17, 2025 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
தலைநகர் டில்லியில் மூன்றாவது நாளாக நேற்றும், ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தன. ஐந்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டன.

துவாரகா செயின்ட் தாமஸ் பள்ளிக்கு நேற்று அதிகாலை, 5:26 மணிக்கு வந்த இ - மெயிலில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

அதேபோல, வசந்த் குஞ்ச் வசந்த் வேலி பள்ளிக்கு காலை 6:30 மணிக்கும், ஹவுஸ்காஸ் மதர் இன்டர்நேஷனல் பள்ளிக்கு காலை, 8:12 மணிக்கும், பக் ஷிம் விஹார் ரிச்மண்ட் குளோபல் பள்ளி காலை, 8:11 மணிக்கும் இதே போல மிரட்டல் இ - மெயில் வந்தன.

லோதி எஸ்டேட் சர்தார் படேல் வித்யாலயாவுக்கும் இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதில், செயின்ட் தாமஸ் பள்ளிக்கு நேற்று முன் தினமும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. பொறுத்தவரை, 24 மணி நேரத்திற்குள் இது இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல்.

இரவு ஊழியர்

டில்லி மாநகரப் போலீஸ், வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்ப நாய் படை மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள், ஐந்து பள்ளிகளிலும் மாணவ - மாணவியர் உட்பட அனைவரையும் வெளியேற்றி அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

பள்ளிகளில் இரவு முழுதும் தங்கியிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் மற்றும் நேற்றும் பள்ளி, கல்லுாரிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ - மெயில்கள் வந்திருந்தன. மூன்றாவது நாளாக தொடர்ந்து கல்வி நிறுவனங்களை குறி வைத்து இதுபோன்ற மிரட்டல் வருவதால், பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த, மூன்று நாட்களில், ஒன்பது கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

அலட்சியம்


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:

நாட்டின் தலைநகரான டில்லியில், தொடர்ந்து மூன்றாவது நாளாக பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களால் ஏற்படும் பயம் மற்றும் இடையூறுகள் குறித்து பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அலட்சியமாக இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கோ அல்லது அவரது நான்கு இயந்திர அரசுகளுக்கோ டில்லி மக்கள் மற்றும் குழந்தைகள் மீது எந்த அக்கறையும் இல்லை. டில்லியை ஒரு சட்டமற்ற காடாக மாற்ற பா.ஜ., முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தொடர்ச்சியாக வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன்? மாதந்தோறும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

முழு உளவுத்துறை அமைப்பும் தோல்வி அடைந்து விட்டதா? உளவு அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வதற்கான பணிகளில் மட்டுமே மும்முரமாக உள்ளனர் என சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மியின் டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:


பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக பெற்றோர்களிடையே பீதி அதிகரித்து வருகிறது. விசாரணை அமைப்பும், அரசு நிர்வாகமும் இப்படியே தொடருமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிம்மதி இல்லை


துவாரகா செயின்ட் தாமஸ் பள்ளி மாணவனின் தந்தை ராகேஷ் அரோரா, இது, எங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளின் படிப்பும் சீர்குலைகிறது. சோதனை நடத்தி புரளி என்கிறார்கள். ஆனால், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம் விலகாது என்றார்.

அதே பள்ளியின் தன் மகளை அழைத்துச் செல்ல வந்திருந்த அனிதா மெஹ்ரா, இந்த மிரட்டல்கள் புரளி என்றாலும், பெற்றோர் எப்படி நிம்மதியாக இருக்க முடியும், என்றார்.டில்லி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் அபரஜிதா கவுதம், குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. புரளி கிளப்பும் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us