UPDATED : அக் 24, 2025 08:20 AM
ADDED : அக் 24, 2025 08:21 AM

சென்னை:
சென்னை மற்றும் ஆவடியில் உள்ள ஒன்பது பள்ளி களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னை நொளம்பூரில் உள்ள மகரிஷி வித்யாலயா, கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா, மகரிஷி வித்யாலையா ஜெ.ஜெ., நகரில் உள்ள சென்னை பப்ளிக் ஸ்கூல், பருத்திப்பட்டு, வேப்பம்பட்டு பகுதிகளில் உள்ள வேலம்மாள் பள்ளிகள் உட்பட ஒன்பது பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் மின்னஞ்சல் முகவரி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

