தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : அக் 24, 2026 12:09 PM

ADDED : அக் 24, 2026 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:09 PM ADDED : அக் 24, 2026 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லியில் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

டில்லி, லோதி எஸ்டேட்டில் சர்தார் படேல் வித்யாலயா, ரோஹிணியில் வெங்கடேஷ்வர் குளோபல் பள்ளி மற்றும் மயூர் விஹாரிலங் சல்வான் பப்ளிக் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கும், 'இ - மெயில்' வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

பள்ளி வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் பிரிவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். மூன்று பள்ளிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சந்தேகத்துக்கு உரிய எந்தப் பொருளும் பள்ளி வளாகங்களில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்தவர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us