UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 09:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலையில் தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்ற, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, மாணவியரின் வாசிப்புத்திறனை மேம்படுத்த, பள்ளி நுாலகங்களுக்கு புத்தகங்கள் வழங்க கோரிக்கை வைத்தார்.
இதன் அடிப்படையில், உடுமலை முன்னாள் நகராட்சித்தலைவர் வேலுசாமி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை, பள்ளி நுாலகத்துக்கு வழங்கினார். புத்தக திருவிழாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் இதை ஊக்குவித்தனர்.