தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று புத்தக திருவிழா துவக்கம் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி

இன்று புத்தக திருவிழா துவக்கம் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி

இன்று புத்தக திருவிழா துவக்கம் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி


UPDATED : அக் 01, 2026 06:39 PM

ADDED : அக் 01, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:39 PM ADDED : அக் 01, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
'நாமக்கல்லில், இன்று முதல் வரும், 18 வரை, புத்தக திருவிழா நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது' என, புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும், பதிப்பாளருமான நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில், எங்கள் புத்தகாலயம் சார்பில், 2002 முதல், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த புத்தகாலயத்தின், 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டமாக, தமிழகம் முழுவதும், 100 நகரங்களில், 'நம்ம ஊரு புத்தக திருவிழா' இந்த ஆண்டு முதல், நகரம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

இது வரை முசிறி, புதுச்சேரி, சேலம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல்லில் நடத்தப்படுகிறது.

இக்கண்காட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழ், ஆங்கில பதிப்பாளர்களின், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன.

அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 15 சதவீதம் சிறப்பு தள்ளுடியும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us