UPDATED : பிப் 03, 2025 12:00 AM
ADDED : பிப் 03, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடி ராமநவமி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி பிப்.28 வரை நடைபெறுகிறது.
தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறுகிறது. 50 ஆயிரம் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுஉள்ளன. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. இதில், ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம், பொது அறிவு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுஉள்ளன. ஞாயிற்றுக்கிழமை விற்பனை உண்டு.