இலங்கையில் புத்தக கண்காட்சி மணிமேகலை பிரசுரம் ஏற்பாடு
இலங்கையில் புத்தக கண்காட்சி மணிமேகலை பிரசுரம் ஏற்பாடு
UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இலங்கையின் யாழ்ப்பாண நகரில், மணிமேகலை பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சி, வரும் 28 மற்றும் 30ம் தேதி நடக்க உள்ளது.
யாழ்ப்பாணம் நகரில், மணிமேகலை பிரசுரம் சார்பில், இரண்டு இடங்களில் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது. வரும் 28ம் தேதி காலை 11:30 மணிக்கு, யாழ்ப்பாணம் பல்கலையின் கேட்போர் கூடத்திலும், 30ம் தேதி காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நுாலக மண்டபத்திலும் கண்காட்சி நடக்க உள்ளது. இதில், புத்தக வெளியீடு, பல்துறை வித்தகர்களின் உரைகள் இடம்பெற உள்ளன.
கண்காட்சியில், 'வாரமலர் ' அந்துமணி எழுதிய அனைத்து நுால்களுடன், மணிமேகலை பிரசுரம் பதிப்பித்த, தமிழ்வாணன், முன்னாள் எஸ்.ஏ.பி., அண்ணாமலை உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள், கட்டுரை நுால்கள் கிடைக்கும்.