UPDATED : செப் 30, 2025 10:25 AM
ADDED : செப் 30, 2025 10:25 AM
மைசூரு:
தசரா புத்தக மேளாவில், மூத்த இலக்கியவாதி பானு முஷ்டாக் எழுதிய புத்தகம் அமோகமாக விற்பனை ஆகிறது. ஒரே வாரத்தில், ஒரே கடையில் 260 புத்தகங்கள் விற்கப்பட்டன.
கன்னடம், கலாசாரத் துறை, கன்னட புத்தக வாரியம், மைசூரு தசரா திருவிழா கமிட்டி சார்பில், மைசூரின் ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ் மைதானத்தில் புத்தக மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு புத்தகங்கள் 40 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. கண்காட்சியில் 94 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆன்மிகம், அறிவியல் புத்தகங்கள், சாதனையாளர்கள், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்கள், குவெம்பு, தேஜஸ்வி எழுதிய புத்தகங்கள், தசரா திருவிழாவை துவக்கி வைத்த, 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக் எழுதிய புத்தகங்கள், மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரிஷ், புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், கன்னட நடிகர், நடிகையர் வாழ்க்கை சாதனை தொடர்பான புத்தகங்கள் உட்பட பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
பானு முஷ்டாக் எழுதிய, 'எதய ஹனதே' புத்தகம், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட, 'ஹார்ட் லேம்ப்' புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஒரே வாரத்தில், ஒரே கடையில் 260 பிரதிகள் விற்பனையாகின. சமீபத்தில் காலமான மூத்த இலக்கியவாதி பைரப்பா எழுதிய புத்தகங்களுக் கும், 'டிமாண்ட்' உள்ளது.