UPDATED : நவ 21, 2025 08:07 AM
ADDED : நவ 21, 2025 08:08 AM

கோவை:
நோய் தீர்க்கும் வனம் சார்ந்த உண்ணக்கூடிய பழங்களின் ஆய்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பாரதியார் பல்கலையின் வளாகத்தில் விழா நடந்தது. இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி மையத்தின்(ஐ.எப்.ஜி.டி.பி.,) இயக்குனர் ரபிகுமார் பேசுகையில், ''ஊட்டசத்து மற்றும் மருத்துவ வளங்களை தக்கவைப்பதில், காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஐ.எப்.ஜி.டி.பி., மற்றும் பாரதியார் பல்கலை ஆகிய நிறுவனங்கள் மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பரந்து விரிந்த பல்லுயிர்கள் ஆய்வு செய்யப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நுாலில் வழங்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள், ஊட்டசத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராடுவதில், காட்டுப்பழங்களின் பங்கு குறித்து மேலும், ஆய்வுகளை துாண்டும்,'' என்றார்.
பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், பல்கலை தாவரவியல் துறை பேராசிரியர் பரிமேலழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

