sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாஜி அதிகாரி எழுதிய புத்தகம்: 2 லட்சம் பிரதி வாங்கிய வங்கி

/

மாஜி அதிகாரி எழுதிய புத்தகம்: 2 லட்சம் பிரதி வாங்கிய வங்கி

மாஜி அதிகாரி எழுதிய புத்தகம்: 2 லட்சம் பிரதி வாங்கிய வங்கி

மாஜி அதிகாரி எழுதிய புத்தகம்: 2 லட்சம் பிரதி வாங்கிய வங்கி


UPDATED : மே 07, 2025 12:00 AM

ADDED : மே 07, 2025 11:25 AM

Google News

UPDATED : மே 07, 2025 12:00 AM ADDED : மே 07, 2025 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் எழுதிய புத்தகங்களின் இரண்டு லட்சம் பிரதிகளை, 7.25 கோடி ரூபாய்க்கு யூனியன் வங்கி வாங்கியது சர்ச்சையாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், 2018 - 2021 வரை தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.

சாதாரண அட்டை

அதன்பின் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராக 2022ல் பொறுப்பேற்றார். இவர், இந்தியா@100: என்விஷனிங் டுமாரோஸ் எகனாமிக் பவர்ஹவுஸ் என்ற புத்தகத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுதினார்; இதை ரூபா பதிப்பகம் வெளியிட்டது.

இந்த புத்தகத்தில் சுதந்திர இந்தியாவின் நுாற்றாண்டு விழாவில் நம் நாடு, 55 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடைந்து இருக்கும் என்பதையும், அதற்கான திட்டங்களையும் விளக்கி உள்ளார்.

இந்த புத்தகம் ஒன்றின் விலை, பேப்பர்பேக் எனப்படும் சாதாரண அட்டையுடன் 350 ரூபாய் மற்றும் ஹார்ட்கவர் எனப்படும் கடினமான அட்டையுடன் கூடிய புத்தகத்துக்கு 597 ரூபாய்.

இந்த இரு வகைகளிலும் முறையே, 1.9 லட்சம் மற்றும் 10,422 புத்தகங்களை யூனியன் வங்கி வாங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலவசமாக இந்த புத்தகங்களை வங்கி வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டு

இதற்காக, 7.25 கோடி ரூபாயை யூனியன் வங்கி செலவிட்டுள்ளது. புத்தகம் வெளி வருவதற்கு முன்னரே 50 சதவீத பணத்தை முன்பணமாக, ரூபா பதிப்பகத்துக்கு வங்கி செலுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியாகி சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பலரும், பொது மக்கள் பணத்தை தவறான வழியில் செலவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, யூனியன் வங்கி தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us