UPDATED : ஏப் 24, 2026 06:08 PM
ADDED : ஏப் 24, 2026 06:10 PM
குமாரபாளையம்:
உலக புத்தக தினத்தையொட்டி, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவ, மாணவியருக்கு பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல், கதை எழுதுதல், வாசித்து காட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டன. மேலும், குமாரபாளையம் பகுதிகளில், 70 இடங்களில் வாசிப்பு இயக்கம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தினமும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. சிறப்பாக வாசித்த மாணவர்கள், சிறுகதை கூறியவர்கள் மற்றும் சிறுகதை எழுதியவர்களுக்கு, விடியல் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கினார். தன்னார்வலர் ஜமுனா உட்பட பலர் பங்கேற்றனர்.
