தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஜிட்டல் யுகத்தில் ஒரு புத்தகப் புரட்சி

டிஜிட்டல் யுகத்தில் ஒரு புத்தகப் புரட்சி

டிஜிட்டல் யுகத்தில் ஒரு புத்தகப் புரட்சி


UPDATED : செப் 27, 2026 02:56 PM

ADDED : செப் 27, 2026 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 02:56 PM ADDED : செப் 27, 2026 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய 'ரீல்ஸ்' உலகத்தில், 'ரியாலிட்டி' என்ன என்பதை விளக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது திருப்பூர் அன்பின் அமைப்பு வாசகர் பேரவை.

பொதுவாக ஒரு அமைப்பு வளர்வது அதன் லாபத்தையும் செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், மனிதர்களின் சிந்தனையையும் வாழ்க்கையையும் மேம்படுத்தும் வாசிப்பு கலாசாரத்தை பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பேரவை செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள அமுதா மழலையர் பள்ளியில் சிறப்பு வாசகர் வட்ட நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ரங்கநாதபுரம் கிளையும் இந்த நிகழ்வில் இணைந்து செயல்பட்டது. அன்பின் அமைப்பு வாசகர் பேரவை தலைவர் குட்டி கிருஷ்ணன், பொருளாளர் ரேணுகா தேவி, ஆலோசகர்கள் பாலமுருகன், தவமணி, வெள்ளிங்கிரி உட்பட பலர் பங்கேற்றனர்.

மொபைல்போன் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் காலத்தில், குழந்தைகளின் நேரத்தை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு வாசிப்பு ஒரு நல்ல வழியாக இருக்கிறது. அந்த வாசிப்பு பழக்கத்தை தனிப்பட்ட செயலாக இல்லாமல், அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு இயக்கமாக மாற்றும் முயற்சியில் அன்பின் அமைப்பு வாசகர் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தன்னம்பிக்கை அதிகரிக்கிறது


டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் குழந்தைகள் செலவிடும் நேரத்தை குறைத்து, புத்தக வாசிப்பின் பக்கம் அவர்களை அழைத்து வர வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு கவனச்சிதறல்களால் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அதனை மாற்றி, மாணவர்களிடம் மீண்டும் புத்தக வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களை ஒன்றாக இணைத்து வாசிக்கச் செய்வதோடு, அவர்கள் வாசித்தவற்றை மேடையில் பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கிறோம். அவர்கள் பேசும்போது கிடைக்கும் பாராட்டும் ஊக்கமும் அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. வாசிப்பின் மூலம் அறிவைப் பெறுவதோடு, அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் திறனும் மாணவர்களுக்கு வளர்கிறது. இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த ஆளுமைகளாக உருவாக உதவும்.

- ஷாருக்கான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வடக்கு செயலாளர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us