ஐ.ஐ.எம்., பெங்களூரில் பி.எஸ்.சி., படிப்பு அறிமுகம்
ஐ.ஐ.எம்., பெங்களூரில் பி.எஸ்.சி., படிப்பு அறிமுகம்
UPDATED : அக் 19, 2025 09:54 AM
ADDED : அக் 19, 2025 09:55 AM

சென்னை:
பி.எஸ்சி., தரவு அறிவியல், பி.எஸ்.சி., பொருளாதாரம் படிப்புகளுக்கு, நவம்பர், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஐ.ஐ.எம்., பெங்களூரு கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலாண்மை கல்வி நிறுவனங்களில், மத்திய அரசின் ஐ.ஐ.எம்., பெங்களூரு முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.இந்த கல்வி நிறுவனத்தில், 2026 -27ம் ஆண்டுக்கான முழுநேர பி.எஸ்.சி., தரவு அறிவியல் மற்றும் பி.எஸ்சி., பொருளாதாரம் படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான நுழைவு தேர்வு, டிசம்பர், 12ம் தேதி நடக்கிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இதன் முடிவுகள், பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும்.
இப்படிப்புகளில் சேர, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், கணித பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள், cdn.digialm.com/EForms/configuredHtml /1345/96226/Registration.html என்ற இணையதளத்தில், நவ., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.