UPDATED : ஜூலை 06, 2026 10:07 AM
ADDED : ஜூலை 06, 2026 10:09 AM

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்வி நிறுவனங்களில், நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர், மருந்தாளுனர், துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிஎஸ்.சி., செவிலியர், பி.பார்ம்., மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, மருத்துவக் கல்வி தேர்வு குழுவின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம், மதிப்பெண் தகுதி, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதற்கு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்புக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தகுதியுடையவர்கள், www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டப்படிப்புகளுக்கு வரும், 7 மாலை, 05:00 மணி வரை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு வரும், 15 மாலை, 05:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு நிறுவனங்களில் இதற்கான கட்டணம் மிகக்குறைவு. பொது செவிலியர் மற்றும் தாதியர் பட்டயப்படிப்புக்கு கட்டணம் இல்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள உதவி மையங்களையோ அல்லது 97514 56001 என்ற உதவி மைய எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
