தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற அழைப்பு

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற அழைப்பு

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற அழைப்பு


UPDATED : அக் 01, 2026 06:46 PM

ADDED : அக் 01, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:46 PM ADDED : அக் 01, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
அரசு, அதன் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபின மாணவ, மாணவியருக்கு, பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அத்திட்டத்தில், 2026 - 27ல், அரசு, அதன் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 3ம் ஆண்டு இளங்கலை படிக்கும் மாணவர்கள், எந்த நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை பெறலாம்.

பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்போருக்கு குடும்ப ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை விண்ணப்பங்கள், யு.எம்.ஐ.எஸ்., என்ற இணைய முகவரியில் உள்ளது.

தகுதியானவர், அவர்கள் படிக்கும் கல்லுாரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள, ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, இணையம் வழியே வரும், 21 வரை விண்ணப்பிக்கலாம்.

தகவலுக்கு, சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 110ல், மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் நல அலுவலகத்தை, வேலை நேரத்தில் அணுகி பயன் பெறலாம் என, கலெக்டர் இளம் பகவத் தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us