UPDATED : ஆக 30, 2026 07:09 PM
ADDED : ஆக 30, 2026 07:11 PM
கரூர்:
கரூர் கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.in விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சம், 9 -10ம் வகுப்பு, 75,000 ரூபாய், பிளஸ் 1, 2விற்கு, 1,25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும். 2025 - 26ம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவர்கள் நாளைக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதை, பள்ளி ஹெச்.எம்., செப்., 15க்குள் சரிபார்க்க வேண்டும்.
