தொழில், கல்வி கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு
தொழில், கல்வி கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு
UPDATED : மே 22, 2025 12:00 AM
ADDED : மே 22, 2025 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம், கல்வி கடன் வழங்கப்படுகிறது.
இதில் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களுடன் உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது.
தகுதியான சிறுபான்மையினர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், நகர வங்கிகளில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.