டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வுக்கு அழைப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வுக்கு அழைப்பு
UPDATED : நவ 15, 2026 01:12 PM
ADDED : நவ 15, 2026 01:13 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா மாதிரி தேர்வுத் தொடர் நடைபெற உள்ளதாக, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் தெரித்துள்ளார்.
கலெக்டர் வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், அரசு போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித்தேர்வு நேற்று, தொடங்கி, வரும் டிச., 26ம் தேதிவரை நடக்கிறது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 044 - 2742 6020 - 94990 55895 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
