sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உதவித்தொகை பெற இளைஞர்களுக்கு அழைப்பு

/

உதவித்தொகை பெற இளைஞர்களுக்கு அழைப்பு

உதவித்தொகை பெற இளைஞர்களுக்கு அழைப்பு

உதவித்தொகை பெற இளைஞர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜன 31, 2026 11:14 AM

ADDED : ஜன 31, 2026 11:17 AM

Google News

UPDATED : ஜன 31, 2026 11:14 AM ADDED : ஜன 31, 2026 11:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜன., 1ம் தேதி முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10ம் வகுப்பு தோல்வி, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, கடந்தாண்டு டிச., 31ம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள மனுதாரர்கள் குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள், கடந்த ஆண்டு டிச., மாதத்தில், 45 வயதிற்கு உட்பட்டும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழகாட்டும் மையத்தில் நேரில், வரும் மார்ச் 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us