தேர்வு எழுதியவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலை கேட்டு மனு
தேர்வு எழுதியவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலை கேட்டு மனு
UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 06:18 PM
சென்னை:
இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு எழுதியோர், பணி நியமனம் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க, கடந்த ஜூலை 21ல் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை.
பணி நியமனம் கோரி, கடந்த இரண்டு மாதங்களில், இரண்டு முறை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, நவ.,க்குள் நியமன ஆணை வழங்கப்படும் என, முதல்வர் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் கூடினர். பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனை சந்தித்து, பணி நியமனம் கோரி மனு அளித்தனர்.
பிறகு தலைமைச் செயலகம் சென்று, பள்ளிக்கல்வித் துறை செயலர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.